ஜம்ரி வினோட்டிற்கு எதிராக போலிஸ் புகார்

Police complaint against Jamri Vinod

ஜம்ரி வினோட்டிற்கு எதிராக போலிஸ் புகார்

Date :07 Feb 2026   News By:

 Kalaymany Penang 

மத நல்லிணக்கத்தை அழிக்கும் பொருட்டு இனங்களிடையே ஒரு பதட்டத்தை  ஏற்படுத்தும் வண்ணம்  பேசி வரும் இஸ்லாமிய மத போதகர் எனும் போர்வையில் செயல்பட்டு வரும் ஜம்ரி வினோட்டிற்கு எதிராக  பினாங்கு மக்கள் போலிஸ் புகார்கள்  செய்தனர்

.

பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் ,பிறை சட்டமன்ற உறுப்பினருமான  டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு அவர்களின் தலைமையில், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் முன்னிலையில், இப்புகார்கள் நேற்று பட்டர்வொர்த் போலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டது.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் இங்குள்ள பொதுமக்களின் ஆதரவுடன்  செய்யப்பட்டுள்ளது.