தமிழ் முஸ்லிம் தொழில் முனைவர்கள் சர்வதேச மாநாடு

Tamil Muslim Entrepreneurs International Conference

தமிழ் முஸ்லிம் தொழில் முனைவர்கள் சர்வதேச மாநாடு

Date:28 Jan 2026 News By:Ganapathy 

தமிழ் முஸ்லிம் தொழில் முனைவர்கள் சர்வதேச மாநாடு சீராட் உலக மாநாட்டில் இரண்டாம் நாளான இன்று அதற்கு தலைமை ஏற்று தலைமை  உரையாற்றியதில் மகிழ்ச்சி 

தலைவர் மாறுவர் தர்பார் மாறும் தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம் என்பது கவிஞர் கண்ணதாசனின் களக்கணிதம் கவிதை வரியாகும் ஆனால் இன்றைய சூழலில் அது கொஞ்சம் மாறி யுக்தி மட்டுமே நமது இலட்சியத்தை வெற்றிகளாகும் என்பது நிதர்சனமாகி வருகிறது தலைவர் வேறு தலைமைத்துவம் வேறு என்பதை நாம் உணர வேண்டும் புதிய தலைமுறை புதிய தலைமைத்துவம் உருவாக்கும் முயற்சியாகவும் இந்த சீராட் மாநாடு அமைகிறது என்பதில் ஐயமில்லை.

 

ஒரு சமுதாயம் என்பது ஒரே பெயர் அல்லது ஒரே அடையாளம் மட்டுமல்ல இது ஒரு பொறுப்பு ஒரே பாதை ஒரே எதிர்காலத்தை நோக்கி பயணிப்பது வேர்களை இணைத்து எதிர்காலத்தை கடமையாக்கும் இந்த முயற்சி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார் மாண்புமிகு டத்தோ ஶ்ரீ டாக்டர் எம் சரவணன்.