உயர் வருமானம் ஈட்டுபவர்களுக்கு மட்டுமே GST வரி பொருந்தும்

Prime Minister Anwar Ibrahim has justified the government's decision to expand the scope of the Sales and Service Tax (SST) on imported food items, stating it targets high-income earners. He highlighted luxury items .

உயர் வருமானம் ஈட்டுபவர்களுக்கு மட்டுமே GST வரி பொருந்தும்

Dated: 16.6.2025   Time: 11.35 am  By: Punithai Chandran

பெட்டாலிங் ஜெயா,

பிரதமர் அன்வார் இப்ராஹிம் இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கான விற்பனை மற்றும் சேவை வரியின் அதாவது SST விரிவாக்கம் குறித்துப் பேசுகையில்,  இது உயர் வருவாய் ஈட்டுபவர்களை இலக்காகக் கொண்டது. வெண்ணெய், அவகோடா பழங்கள் (avocados) மற்றும் கோட் மீன்கள் (cod fish), கிங் நண்டுகள் (king crabs), சால்மன் (salmon) மற்றும் ட்ரஃபுள்கள் (truffles)  போன்ற பல உணவுப் பொருட்கள் பொதுவாக, வசதிப் படைத்தவர்களால் வாங்கப்படுகின்றன என்று அவர் கூறினார். இம்மாதிரியான உயர்தரப் பொருட்களுக்கு 5% வரி விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களைளுக்கு இந்த வரி பொருந்தாது. அதேபோல், உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பிசாங் எமாஸ் (pisang emas) மற்றும் பிசாங் ரஸ்தாலி (pisang rastali) போன்ற வாழைப்பழங்களுக்கும் வரி விதிக்கப்படாது என்றார்.  மக்கள் SST – இன் விரிவாக்கத்தை, GST உடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஜூன் 9 அன்று, நிதி அமைச்சகம், அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு, ஜூலை 1 முதல் 5%  சதவிகிதம் முதல் 10% சதவிகிதம் வரை வரி விதிக்கப்படும் என்று அறிவித்தது,  இருப்பினும் அடிப்படைத் தேவைகளுக்கு வரி விதிக்கப்படாது. ஆயினும், இந்த அறிவிப்பு மக்களிடையே கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி. எஃப்எம்டி.