மலாய் ஒற்றுமை முயற்சி, ஆத்திரமூட்டும் நடவடிக்கை - பிகேஆர் எம்பி கண்டனம்
PKR Member of Parliament, Ghafik Johari, accused Perikatan Nasional (PN) of attempting to unite Malays, following Dr. Mahathir Mohamad's support for a new coalition

Dated: 6.6.2025 Time: 3.50 pm By: Punithai Chandran
பெட்டாலிங் ஜெயா,
மலாய்க்காரர்களை ஒன்றிணைப்பதற்கு தற்போதைய பெரிக்காத்தான் நேஷனல் கட்சி தன்னைக் காட்டிக் கொள்ள முயற்சிப்பதாக இன்று பிகேஆர் கட்சியின் சுங்கைப் பட்டாணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெளஃபிக் ஜோஹாரி குற்றஞ் சாட்டியுள்ளார். அரசாங்கத்தில் மலாய்க்காரர்களின் அதிகாரத்தை மீட்டெடுக்கும் டாக்டர் மகாதீர் முகம்மதின் புதிய கூட்டணிக்கு ஒரு பாஸ் கட்சித் தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளதை அடுத்து அவர் இவ்வாறு கூறினார்.
முன்னாள் பிரதமரும், பி.என்.னின் ஒரு அங்கமான பாஸ் கட்சியும் கடந்த காலத்தில் சமூகத்தை பலமுறை பிளவுப்படுத்தியுள்ளனர். மகாதீரின் இந்த கருத்து ஒரு அவசரமான மற்றும் ஆத்திரமூட்டுவதற்கான நடவடிக்கை ஆகும் என்பதனை, பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் அறிந்திருக்க வேண்டும் என்றார். .
மகாதீர் அம்னோவை விட்டு வெளியேறி, பெர்சத்து பின்னர் பிஜவாங் கட்சிகளை உருவாக்கினார். இந்த மூன்று கட்சிகளும் மலாய் அடிப்படையிலான கட்சிகள்தான். இப்போது மலாய் ஒற்றுமையை ஒற்றுமையை மீட்டெடுக்க ஒரு புதிய கூட்டணி தேவை என்கிறார். மகாதீரின் இந்த தவறான கூற்றுக்கு பாஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஜனநாயக அமைப்பு பல அரசியல் கட்சிகளை உருவாக்க அனுமதித்துள்ளது என்றாலும், மலாய்க்காரர்களை ஒன்றிணைக்க சிந்தனைவாதிகள், கார்ப்பரேட் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மத அறிஞர்கள் அடங்கிய ஒரு பெரிய கூட்டணி தேவை என்றும் கெளஃபிக் ஜோஹாரி கூறினார்.