STPM 2021: 874 மாணவர்கள் 4.00 CGPA பெற்று சிறப்புத் தேர்ச்சி
STPM 2021: 874 students secured 4.00 CGPA with distinction
கோலாலம்பூர்: 42,369 மாணவர்களில் மொத்தம் 874 பேர் மலேசிய உயர்நிலைப் பள்ளிச் சான்றிதழ் (STPM) 2021 இல் 4.00 என்ற ஒட்டுமொத்த தரப் புள்ளி சராசரியை (CGPA) பெற்றுள்ளனர்.
அந்த எண்ணிக்கையில் 584 பேர் அல்லது 66.82 விழுக்காட்டு மாணவர்கள் B40 குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவர் என மலேசிய தேர்வு மன்றத்தின் (MPM) தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முஹமட் எக்வான் தோரிமான் தெரிவித்தார்.
“2020 ஆம் ஆண்டில் 741 மாணவர்களில் 4.00 CGPA பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 133 மாணவர்களாக அதிகரித்துள்ளது,” என்று இன்று நடைபெற்ற STPM 2021 முடிவு அறிவிப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
இருப்பினும், மாணவர்களின் ஒட்டுமொத்த சாதனையின் அடிப்படையில், STPM 2021 தேசிய CGPA 2.79 ஆகும். இது முந்தைய ஆண்டின் (CGPA: 2.78) சாதனையைப் போலவே சமமாகக் கருதப்படுகிறது என இது குறித்துக் கருத்து தெரிவித்த மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான முஹமட் எக்வான் கூறியதாக MPM-இன் தலைமை நிர்வாகி அட்னான் ஹுசின் கூறினார்.
“இந்தச் சாதனை STPM 2020 மாணவர்களின் சாதனைக்குச் சமமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், முன்னேற்றத்தில் உள்ள வேறுபாடு மிகவும் சிறியது. அதாவது 0.01 புள்ளிகள் மட்டுமே.
“இந்த அதிகரிப்பு வேறுபாடு STPM 2020 மாணவர்களுடன் ஒப்பிடும்போது STPM 2021 வேட்பாளர்களின் ஒட்டுமொத்த சாதனைக்குக் குறிப்பிடத்தக்க வேறுபாட்டினைப் பிரதிபலிக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
ஒட்டுமொத்தமாக மாணவர்களின் CGPA சாதனையானது 3.75 மற்றும் அதற்கு மேல் உள்ள CGPA 9.04 விழுக்காடு, CGPA 3.0 மற்றும் அதற்கு மேல் 41.72 விழுக்காடு, CGPA 2.75 மற்றும் அதற்கு மேல் 55.85 விழுக்காடு, CGPA 2.0 மற்றும் அதற்கு மேல் 88.24 விழுக்காடு எனஅனைத்தும் 2020 உடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது என்று அவர் விளக்கினார்.
“இந்த அதிகரிப்பு மூலம், STPM மாணவர்கள் பொது பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படுவதற்கு எந்தத் தடையும் இருக்காது என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், எடுக்கப்பட்ட ஐந்து பாடங்களிலும் 5A பெற்ற விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டில் 23 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 36 ஆக அதிகரித்துள்ளது