பெர்சத்து கட்சியின் உட்பூசல்,3-ஆவது அணி உருவகுமா!?

Internal strife within the Bersatu Party, will a 3rd faction be formed?

பெர்சத்து கட்சியின்  உட்பூசல்,3-ஆவது அணி உருவகுமா!?

Date:24 Feb 2026 News By:A.Chandrasegaran Kluang 

சந்திர சேகர ன் ஆறுமுகம்

பெர்சத்து கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய டத்தோ ஹம்சா சைனுடின் அதிரடியாக விலக்கப்பட்டது மலே‌சிய அரசியலில் அதிரடியாக மாற்றங்களை ஏற்படும் சூழ்நிலையை உணரமுடிகிறது.​

​பெர்சத்து கட்சியில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவப் போராட்டம் மலேசிய அரசியலில் 3வது அணி உருவாக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

முன்னாள் பிரதமர் தன் ஸ்ரீ முஹிடின் யாசின் மீண்டும் அதிகாரத்தைப் பிடிக்கத் துடிக்கும் வேளையில், கட்சியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 19 பேரின் ஆதரவைப் பெற்றுள்ள டத்தோ ஹம்சா சைனுடின் ஒரு வலுவான சக்தியாக உருவெடுப்பரா என்று அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.

​தற்போது டத்தோ ஹம்சா மற்றும் அவரது ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து ஓரம் கட்டுபட்டுவிட்ட சூழலில், அம்னோ மற்றும் பாஸ் ஆகிய கட்சிகள் அவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க வலை விரித்துள்ளன. ஆனால், அந்தப் பழைய பாதைகளில் பயணிக்காமல் ஹம்சா ஒரு புதிய பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்பதை இங்கே கவணிக்கப் பட வேண்டியள்ளது.

​பல்லினக் கூட்டணியின் தேவை என்ற     சூழ்நிலையில் ஒரு தீர்க்கதரிசனமான முடிவு எடுக்கப்பட வேண்டிய நிலையும் டத்தோ ஹம்சாவிற்கு இங்கே உருவாகியுள்ளது.

​மலேசியாவிற்கு இன்று தேவைப்படுவது மற்றுமொரு மலாய்க்காரர் கட்சி அல்ல,மாறாக, பி.கே.ஆர் (PKR) ஜசெக (DAP)போன்ற ஒரு பலினக் கட்சிதான்  என்பதை இங்கே டத்தோ ஹம்சா சைனுடின் கவனத்தில் கொள்ள  வேண்டியுள்ளது.

அத்தோடு,டத்தோ ஹம்சா சைனுடின் தற்போதைய சூழலில் தன்னை வஞ்சிக்கப்பட்டவராக உணரும் ஆளுமை மிக்க அரசியல்வாதிகளான ரஃபிசி ரம்லி, நிக் நஸ்மி மற்றும் துடிப்பான தலைவரான கைரி ஜமாலுடின் போன்றோருடன் கைகோர்க்க வேண்டும்.இந்தத் தலைவர்கள் ஒன்றிணைந்து, இன மத பேதங்களுக்கு அப்பாற்ப்பட்ட ஒரு கொள்கை பிடிப்பைக் கொண்ட மூன்றாவது அணியை உருவாக்கினால், அது மலேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது தின்னம்.
 ​அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 16-ஆவது பொதுத்தேர்தல் (GE16) மலேசியாவின் தலையெழுத்தை மாற்றப்போகும் ஒரு களமாகும். கட்சி தலைமைத்துவப் போட்டியால் சிதைந்து வரும் வேளையில், ஹம்சா தலைமையிலான ஒரு புதிய கூட்டணி உருவானால், அது அன்வாருக்கும் பெரிகாத்தான் நேஷனலுக்கும் மிகச்சரியான சவாலாக அமையும்.

மலேசியர்கள் குறிப்பாக சீனர்கள் இந்தியர்கள்,பிரதமர் அன்வாரின் இனிப்பு வார்த்தைகளால் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள் என்பது நாடு அறிந்த உண்மை,மேலும் இந்து கோயில்கள் நில விவகாரம் மற்றும் சீன சமுதாயம் எதிர்நோக்கும் பன்றி வளர்ப்பு  விவகாரங்களை தீர்ப்பதில் டத்தோ ஸ்ரீ அன்வாரின் அரசாங்கத்தின் நிலைபாடு தங்களின் வாழ்வாதாரத்தையும், கலாச்சார உரிமைகளையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்கக்கூடிய ஒரு நேர்மையான மாற்றத்திற்காகக் விளைவிக்கூடும் என அச்சம் ஏற்படுத்தியுள்ளது.  

அந்த மாற்றத்தை டத்தோ ஹம்சா சைனுடின் மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்ட தலைவர்கள் வழங்குவார்களா என்ற கேள்வி மக்கள் மனங்களில் வேரிட்டுள்ளது.  

இந்த சூழ்நிலையில், ஒரு மூன்றாவது அணியின் உருவாக்கம் என்பது தற்போதைய காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பும் கூட என்பது மறுக்கமுடியாது.

மூன்றாவது அணி

டத்தோ ​ஹம்சாவின் மூன்றாவது அணி சாத்தியங்களும் சவால்களும்,ஒரு விரிவான அரசலை இங்கே பார்ப்போம்.

​மலேசிய அரசியலில் ஒரு புதிய பல்லினக் கூட்டணியை உருவாக்கம் என்பது காகிதத்தில் எளிதாகத் தோன்றினாலும், களத்தில் அது பல முட்களைக் கொண்ட பாதையாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். டத்தோ ஹம்சா சைனுடின் மற்றும் அவரது சகாக்கள் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களையும் சற்று அலசி பார்ப்போம்.

​ஒரு புதிய அரசியல் சக்தியை நிலை நிறுத்துவதில் டத்தோ ஹம்சாவுக்கு முன்னால் மூன்று பெரும் தடைகள் உள்ளன.​நம்பகத்தன்மை நெருக்கடி (Credibility Gap)டத்தோ ஹம்சா நீண்டகாலம் அம்னோ மற்றும் பெர்சத்து ஆகிய வலதுசாரி மலாய்க்காரர் கட்சிகளில் இருந்தவர். திடீரென அவர் ஒரு பல்லினத் தலைவராக உருவெடுப்பதை சீன மற்றும் இந்திய சமூகத்தினர் எந்தளவுக்கு நம்புவார்கள் என்பது இங்கே ஒரு கேள்விக்குறி. அதிகாரத்திற்காக வேடம் மாறுகிறாரா? என்ற விமர்சனத்தை அவர் முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.இந்த ​சித்தார்ந்த மோதல் வரும் சாத்தியமும் இங்கு உண்டு. 

இங்கே டத்தோ ஹம்சா சைனுடின் ரஃபிசி ரம்லி மற்றும் நிக் நஸ்மி போன்றவர்கள் சீர்திருத்தவாத (Reformist) பின்னணி கொண்டவர்களை இணைத்து கொண்டால் மேலும் வலு சேர்க்க முடியும். டத்தோ ஹம்சா ஒரு நிர்வாக ஆற்றல் கொண்டவர் என்பதை இங்கே கவனிக்கப்படவேண்டும்.

 இவர்களுக்கிடையே கொள்கை ரீதியான ஒருமித்த கருத்தை உருவாக்குவது கடினமான காரியம்.

​அரசியல் கட்டமைப்பு மலேசியாவில் ஒரு புதிய கட்சியைப் பதிவு செய்வதிலிருந்து, நாடு தழுவிய அளவில் கிளைகளை உருவாக்குவது வரை பெரும் நிதி மற்றும் மனித உழைப்பு தேவை. அடுத்த ஆண்டு தேர்தல் என்பதால், கால அவகாசம் மிகக் குறைவாகவே உள்ளது.

​2. ஹம்சாவின் அடுத்தகட்ட நகர்வுகள், வியூகங்கள் என்ன? என்ற கேள்வியும் எழுகின்றன.

டத்தோ ​ஹம்சா தற்போது ஒரு காத்திருந்து கவனிக்கும்(Wait and See) பாணியைக் கையாண்டாலும், திரைமறைவில் கீழ்க்கண்ட நகர்வுகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பெர்சத்து 

​கட்சியைக் கைப்பற்றுதல் அல்லது உடைத்தல் தற்போதுள்ள 19 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வைத்துக்கொண்டு, கட்சியை சட்ட ரீதியாகத் தன்வசப்படுத்த முயல்வார். அது தோல்வியுற்றால், அந்தப் பெரும்பான்மை உறுப்பினர்களுடன் வெளியேறி, புதிய மூன்றாவது அணியின் அச்சாணியாக மாறுவார். 

மேலும்,​ தற்போதைய நிலையில் முன்னால் பி.கே.ஆர் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்றுள்ள கைரி ஜமாலுடினைத் தனது அணியின்  முகமாக முன்னிறுத்துவது ஹம்சாவின் மாஸ்டர் பிளான் ஆக இருக்கலாம். இது நகர்ப்புற மற்றும் படித்த மலாய்க்காரர்களின் வாக்குகளைக் கவரும் திட்டமாக கருதலாம்.

​நடுநிலை வாக்காளர்களைக் கவர்தல் (The Kingmakers): அன்வாரின் அரசாங்கத்தின் மீதும் அதிருப்தி, பாஸ் (PAS) கட்சியின் தீவிரவாதத்தின் மீதும் அச்சம் கொண்ட 30 சதவிதத்திற்கும் அதிகமான நடுநிலை வாக்காளர்களைத் தனது இலக்காகக் கொள்வார்

.

​3. பி.கே.ஆர் (PKR) பாணி பல்லின அரசியல்: ஏன் அவசியம்? என்ற கேள்வியும் எழுகிறது.

டத்தோ ​ஹம்சா மீண்டும் ஒரு மலாய்க்காரர் கட்சியை ஆரம்பித்தால், அது அம்னோ மற்றும் பெர்சத்துக்கு  மாற்றாக மட்டுமே அமையும். ஆனால், அவர் ஒரு பல்லினக் கட்சியை (Multiracial Party) உருவாக்கினால் இந்திய மற்றும் சீன வாக்குகள் அன்வார் அரசு மீது அதிருப்தியில் உள்ள சிறுபான்மையினருக்கு இது ஒரு பாதுகாப்பான புகலிடமாகத் அமையும் என்பது திண்ணம்.

​கிழக்கு மலேசியா (Sabah & Sarawak)  சபா மற்றும் சரவாக் மாநிலக் கட்சிகள் எப்போதும் ஒரு பல்லினத் தன்மை கொண்ட கூட்டணிக்கே முன்னுரிமை அளிக்கும்.

 எனவே,டத்தோ ஹம்சாவின் புதிய அணி இவர்களுடன் கைகோர்க்க எளிதாக இருக்கும்.

​இந்த மூன்றாவது அணி உருவானால், GE16-இல் மூன்று முனைப் போட்டி ஏற்படும்:​பக்காத்தான் ஹரப்பான் (PH) + அம்னோ(UMNO) தற்காப்பு நிலையில் இருக்கும்.பெரிகாத்தான் நேஷனல் (PN)  முக்கியமாக (PAS) தனது கிராமப்புற மலாய் வாக்கு வங்கியை நம்பியிருக்கும்.​

ஆனால் டத்தோ ஹம்சா தலைமையிலான புதிய அணி நகர்ப்புற, பல்லின மற்றும் அதிருப்தி மலாய் வாக்குகளைப் பிரிக்கும். இது அன்வாருக்குப் பெரும் தலைவலியாக அமையும் என்பதை மறுக்க முடியாது.

டத்தோ ஹம்சா சைனுடின் ஒரு திறமையான அரசியல் காய்நகர்த்தலாளர் என்பதில் ஐயமில்லை. அவர் தனது வலதுசாரி பிம்பத்தைக் களைந்து, ரஃபிசி மற்றும் கைரி போன்ற நவீன முகங்களுடன் இணைந்தால், மலேசியாவின் 10-ஆவது பிரதமர் கனவில் இருக்கும் பலருக்கு அவர் முட்டுக்கட்டையாக அமைவார் என்பதில் அய்யமில்லை.

மேலும்,பி.எஸ்.எம், எம்.ஜ.பி.பி,உரிமை,கெராக்கன் போன்ற சிறுபான்மையினர் கட்சிகளுடன் இணைந்து இந்த அரசியல் சதுரங்கத்தில் இந்த நாட்டின் வளர்ச்சியில் தியாகம் செய்த அந்த தலைமுறையினரை இந்த அரசியல் நீரோட்டத்தில் இணைந்து ஒரு வளமான பிரிவினைவாத இல்லாத நாட்டை உருவாக்கி வழிநடத்த வேண்டும் என்று அனைத்து மலேசியருடை விருப்பமாகும்.