பினாங்கிற்கும் இலங்கைக்கும் உறவு பாலம் அமைத்தார் பெலிதா நசீர் முகைதீன்.
Pelita Nasir Muhyiddin built a bridge of relations between Penang and Sri Lanka.
Date:24 Feb 2026 News by: மு.வ.கலைமணி, பினாங்கு.
மதத்தால் ஒரு முஸ்லிமாக இருந்தாலும் மனதால் நாங்கள் ஒரு தமிழன் என்ற அடிப்படையில், இலங்கை நாட்டிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீறுடைகள் மற்றும் உபகரண பொருட்களை பினாங்கு, பெலித்தா இயக்கம், இலங்கை நாட்டிலுள்ள பள்ளி அமைப்புகளிடம் அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.
இதன் தொடர்பாக மலேசியாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரியிடம் பேச்சு வார்த்தை நடத்தியதோடு இரு நாட்டுக்கும் ஒரு உறவுப் பாலம் ஏற்பட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பெலிதா இயக்க தலைவர் டாக்டர் ஹாஜி நசீர் முகைதீன் கூறினார்.
சுமார் 150 மாணவர்களுக் குறிய உபகரணப் பொருட்கள் இலங்கை பிரதிநிதியான திரு.முகமது நபீர் மூலமாக வழங்கப்பட்டது.
இத்திட்டம் நிறைவேற மனித நேயம் அடிப்படையில்,
திரு.ஹாஜி வாயிட், திரு.எஸ்.எம்.சோல், திரு.நபீர்
துணை நின்றனர். அவர்களுக்கு நன்றி கூறுவதாக அவர் தெரிவித்தார்.
பினாங்கிற்கும் இலங்கைக்கும் ஒரு உறவு பாலம் அமைக்க தமக்கு இவ்வாய்ப்பு கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி சொல்கிறோம்.
அதே வேளையில் அங்குள்ள தமிழ் மாணவர்களுக்கு இவ்வுதவிகள் சென்று சேருவதை கண்டு மகிழ்ச்சியடைகிறோம் என பெருமிதம் கொண்டார்.
இனாங்கு பெலிதா இந்திய முஸ்லிம் இளைஞர் இயக்கம் என்பது முஸ்லிம் இயக்கத்திற்கு மட்டுமல்லாது எல்லா தமிழ் இயக்கத்துடனும் நட்புறவு கொண்ட இயக்கமாக வெற்றிகரமாக இயங்கி வருகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.



ganapathy







\
