திமுக கூட்டணியில் தேமுதிக பிரேமலதா கூட்டணி
DMDK-Premalatha alliance in DMK alliance
Date: 19 Feb 2026 News By: Ganapathy Krishnasamy
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியன் முஸ்லீம் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்புமணியின் பா.ம.க, டிடிவி தினகரனின் அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஓ.பன்னீர்செல்வமும் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் கூட்டணி குறித்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.
இன்று காலை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷை அமைச்சர் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், திமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டார். இந்த சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். கட்சி ஆரம்பித்ததில் இருந்து முதல் முறையாக தேமுதிக திமுவுடன் கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ், சமீப நாட்களாக ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அதனை திமுக திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதால் திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே தமிழகம் வந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸின் கோரிக்கை அல்ல என்றும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் என்றும் உறுதிப்பட தெரிவித்தார். திமுகவிடம் இருந்து அதிக தொகுதிகளை பெற்றுவிடலாம் என்று எண்ணத்தில் இருந்த நேரத்தில், தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததால் காங்கிரஸுக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.



ganapathy







\
