மக்கள் நலம் கருதி பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரவேண்டும் .

மக்கள் நலம் கருதி பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரவேண்டும் .

மக்கள் நலம் கருதி பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரவேண்டும் .
மக்கள் நலம் கருதி பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரவேண்டும் .

பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரவேண்டும்

1953 ஆம் ஆண்டு இலங்கை வம்சாவளி தமிழர் டி ஆர்.சீனிவாசகம் அவர்களால் இந்த மலேசிய நாட்டில் தோற்று வைக்கப்பட்ட கட்சி PPP என்று அழைக்கபடும் மக்கள் முற்போக்கு கட்சி. ஆரம்பிக்கப்பட்ட சில காலங்களில் மலேசிய மக்களிடம் அதிவேக வரவேற்பை பெற்றது .மத பேதம் இன்றி அனைத்து மக்களுக்காகவும் இந்த கட்சி பாடு பட்டது  என்பதை யாவரும்

அறிந்தவை.ஆரம்ப காலத்தில் PPP,UMNO,MIC,MCA ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து,பிறகு அது தேசிய முண்ணனியாக மாறியது.அதன் பிறகு 1955 ஆண்டு கலில் தொகுதி பங்கீட்டால் கூட்டணியுடன் கருத்து வேறுபாட்டால்,கூட்டணியில் இருந்து விலகி எதிர்கட்சியாக மாறியது.1969 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிட்ட திட்ட பேராக் மாநிலத்தை ஆட்சி செய்யும் தருவாயில் இருந்த போதிலும்,இறுதியில்  பேராக் மாநிலத்தில் ஒரு வலுவான எதிர் கட்சியாக உருவெடுத்தது.இந்த PPP கட்சி வழுவானதற்கு சீனர்களின் பேராதரவு என்பது குறிப்பிட தக்கது.இருப்பினும் இந்த கட்சியில் முக்கிய பொறுப்புகளை இந்தியர்கலே வகித்தார்கள்.மலேசிய அரசியலிலும், சட்ட துரையிலும் சரி பல அதிர்வுகளை ஏற்படுத்தி அழிக்க முடியாத பதிவுகளை விட்டு சென்றுள்ளார்கள்.அந்த வகையில் 1970 ஆம் ஆண்டுகளில் ஈப்போ மாநகர் மன்ற தலைவராக  DR சீனிவாசகம் அவர்கள்  பதவி வகித்தார்கள்.அதே போன்று பினாங்கு மாநிலத்திலும் ஒரு இந்தியர் மேயராக பதவி வகித்தார்கள் என்பது குறிப்பிட தக்கது.இப்படி எல்லாம் நமது சமுதாயத்திற்கு வாய்ப்புகளை

ஏற்ப்படுத்தி கொடுத்த இந்த கட்சி DR சீனிவாசகம்

அவர்களின் மறைவுக்கு பிறகு நாற்காலி சண்டையால், பல நீதி மன்ற வழக்குகள், பல தலைமைத்துவ மாற்றங்களுக்கு பிறகு 1993 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் துன் Dr.மகாதீர் முகமது அவர்களின் ஆலோசனையின் பேரில் அந்த PPP கட்சிக்கு தான் ஶ்ரீ கேவியஸ் தலைமை பொறுப்பேற்று, கட்சியை வழிநடத்தினார்.மீண்டும் தேசிய முன்னணி கட்சியில் இணைந்து துணை அமைச்சர் பதவி,செனட்டர் பதவி,நகராண்மைக் கழக உறுப்பினர்கள் மற்றும் பல பதவிகள் பெரும்பாலான இந்தியர்களுக்கு கிடைத்தது.2018 ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து மீண்டும் கட்சிக்குள் பிரிவு ஏற்பட்டு ,இன்று  மீண்டும் நீதி மன்ற வழக்குகளை சந்தித்து கொண்டிருக்கிறது.இந்த பதவி போராட்டத்தின் காரணமாக எதை எதையோ எல்லாம் இழந்து விட்டார்கள்.

எனவே தற்போது இருக்கும் இந்த பிரச்சனைகளை களைய இரண்டு தரப்பினகளும் அமர்ந்து பேச வேண்டும்.PPP கட்சியை நம்பி இருக்கும் அவர்களின்  ஆதரவாளர்களின் நலன் கருதி இருவரும் மீண்டு ஒன்று சேரவேண்டும்.கட்சியை வழு படுத்த வேண்டும்.ஒன்று பட்டால்தான் உண்டு வாழ்வு.தமிழகத்தின் இரு இமையங்கள் இசை ஞானி இளையராஜாவும், SP.பாலசுப்ரமணியம்மும் பிரிவுக்கு பின் மீண்டும் ஒன்று சேரவில்லையா,! வாழ்வது கொஞ்ச காலமே.அதில் நமக்கிருக்கும் வையாக்கியங்களை விட்டு விட்டு தொண்டர்களின் நலன் கருதி இருவரும் மீண்டு ஒன்று சேரவேண்டும்.இழந்ததை எல்லாம் மீண்டும் பெறவேண்டும்.நாம் ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் எந்த தவறும் இல்லை.நம் முன்னோர்கள் உருவாக்கிய இந்த மக்கள் முற்போக்கு கட்சியை அழித்து விடாதீர்கள்.வாழ வையுங்கள்.இது மக்களின் எதிர்பார்ப்பு.

ஆக்கம் : மோகன்