ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்திய ஈ யி & யூ சின்-இன் சிறப்பான ஆட்டம்

ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்திய ஈ யி & யூ சின்-இன் சிறப்பான ஆட்டம்

ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்திய ஈ யி & யூ சின்-இன் சிறப்பான ஆட்டம்
ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்திய ஈ யி & யூ சின்-இன் சிறப்பான ஆட்டம்

ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்திய ஈ யி & யூ சின்-இன் சிறப்பான ஆட்டம்.

கோலாலம்பூர்: நாட்டின் ஆண்கள் இரட்டையர் பிரிவைச் சேர்ந்த தியோ ஈ யி – ஓங் இயூ சின் ‘தெர்பூக்கா மலேசியா’வின் இரண்டாவது சுற்றில், 2020 தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டின் வீரரானத் தைவானைச் சேர்ந்த வாங் சீ லின்-லீ யாங்கைத் தோற்கடித்துச் ​​ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆக்சியாத்தா அரேனா புக்கிட் ஜாலீலில் நடைபெற்ற அதிரடி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்த ஜோடி 21-17, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

நாளை அரையிறுதியில் இந்தோனேசிய ஜோடியான ஃபஜார் அல்ஃபியான்-முஹமட் ரியான் ஆர்டியாந்தோ மற்றும் ஜெர்மன் ஜோடியான மார்க் லாம்ஸ்ஃபுஸ்-மார்வின் சீடல் இடையேயான ஆட்டத்தில் சந்திக்கவிருக்கின்றனர்.

இதற்கிடையில், பிற மூன்று தேசிய பிரதிநிதிகள், அதாவது பெண்கள் இரட்டையர், பேர்லி தான்-எம்.தினா மற்றும் கலப்பு இரட்டையர், கோ சூன் ஹுவாட்-ஷெவோன் லாய் ஜெமி மற்றும் சென் தாங் ஜீ-வலரி சியோவ் ஆகியோர் அந்தந்தப் போட்டியாளர்களுடன் தோற்றுக் காலிறுதிக்கு முன்னேறத் தவறினர்.