வட மலேசிய பல்கலைக்கழகம் (UUM) 9 கல்வித் திட்டங்களை நிறுத்துகின்றது

வட மலேசிய பல்கலைக்கழகம் (UUM) 9 கல்வித் திட்டங்களை நிறுத்துகின்றது

வட மலேசிய பல்கலைக்கழகம் (UUM) 9 கல்வித் திட்டங்களை நிறுத்துகின்றது
வட மலேசிய பல்கலைக்கழகம் (UUM) 9 கல்வித் திட்டங்களை நிறுத்துகின்றது

கோலாலம்பூர்: நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்றும் சந்தையில் அதன் தேவை இல்லாத காரணத்தாலும் அதன் 20 கல்வித் திட்டங்களை மலாயாப் பல்கலைக்கழகம் (UM) நிறுத்திய அதே நடவடிக்கையை வட மலேசிய பல்கலைக்கழகமும் (UUM) மேற்கொண்டுள்ளது.

இந்நடவடிக்கையானது போட்டி மற்றும் தொழில்துறைக்கு ஏற்றதாக இருக்கும் என்று ஆய்வு செய்து 8 புதிய கல்வித் திட்டங்களை மாற்றியமைத்துள்ளதை அடுத்து மேற்கொள்ளப்பட்டதாக UUM துணைவேந்தர், பேராசிரியர் டாக்டர் ஹயிம் ஹில்மான் அப்துல்லா கூறினார்.

குறிப்பிட்ட சில கல்வித் திட்டங்களை நிறுத்துவது மாணவர்களைப் பாதிக்கவில்லை. ஏனெனில், அப்பாடத் திட்டங்களுக்கு அதிக தேவை இல்லை என்று அவர் கூறினார்.

“குறிப்பிட்ட சில பாடத் திட்டங்களை நாங்கள் நிறுத்தியதற்குக் காரணம், அதில் குறைந்த எண்ணிக்கையிலான பட்டதாரிகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றனர். மேலும், அந்தப் பாடத் திட்டங்கள் மாணவர்களிடையே பிரபலம் அடையவில்லை. அதன் அடிப்படையில் நாங்கள் புதிய மற்றும் புதுப்பித்த திட்டங்களை வழங்குகிறோம்.

“உயர்கல்வி அமைச்சு (MOHE) மட்டத்தில் நடவடிக்கை மற்றும் மலேசிய தகுதிகள் முகமையின் (MQA) பார்வைக்கு ஏற்ப கடந்த சில ஆண்டுகளாக இந்த நடவடிக்கை கட்டம் கட்டமாகச் செய்யப்பட்டது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், குறைந்த பட்சம் மற்ற நான்கு உள்ளூர் பல்கலைக்கழகங்களாவது, தற்போதுள்ள கல்வித் திட்டங்களை நிறுத்தும் திட்டம் இல்லை என்பதை உறுதிப்படுத்தியது. அதற்குப் பதிலாக அந்தந்த பல்கலைக்கழகங்கள் பாடத் திட்டத்தில் மேம்பாடுகளைச் செயல்படுத்துகிறது.