பினாங்கு தமிழ்ப்பள்ளி சாதனை 24 மாணவர்கள் , 80 தங்கப்பம் சாதனை
Penang Tamil School achievement: 24 students, 80 gold
Date:14 Jan 2026 News By: Kalaimany
அகில உலக எந்திர தொழில் நுட்ப போட்டியில் வாகை சூடிய பினாங்கை சேர்ந்த தமிழ்ப்பள்ளி சாதனையாளர்களுக்கு பாராட்டு விருந்துபசரிப்பினை பினாங்கு சத்ரியன் சோப்பஸ் மோட்டார் குழுவினர் சிறப்பாக நடத்தினர்.
தைப்பே, தைவானில் கடந்த நவம்பரில் நடந்தேறிய உலக அளவிலான இப்போட்டியில் நமது பினாங்கு மானிலத்தை சேர்ந்த சுமார் 24 மாணவர்கள் பங்குப் பெற்று 80 தங்கப்பதக்கத்தை வென்று உலக சாதனையாளர்களாக பிரகடனம் செய்யப்பட்டனர்.
தைப்பே, தைவான் நகருக்கு பயணமான மாணவர்களுக்கு விமான நிலையத்தில் முதல் வழியனுப்பும் முதல் வரவேற்பும் வழங்கியவர் எனும் பெருமையை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு அவர்கள் பெற்றுக் கொண்டது போல் இரண்டாவதாக கௌரவிப்பினை மாநில முதலமைச்சர் மேதகு சோவ் கொன் சாவ் பெறுகையில்,
மூன்றாவதாக, பினாங்கு சத்ரியன் சோப்பஸ் மோட்டார் குழுவைச் சேர்ந்த அதன் தலைவர் திரு.செல்வராஜன் பெறுகிறார்.
திரு.செல்வராஜன் ராமன் அவர்கள் தலைமையில், அவரது குழுவினரின் மகத்தான ஏற்பாட்டில் நிபோங் தெபால் இந்தியர் சங்க மண்டபத்தில் அண்மையில்,
24 சாதனையாளர்களுக்கு, ஏற்பாட்டாளர்களால்,
பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முன்னிலையில் இவ்விழா களைக்கட்டியது.
டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு அவர்கள் சிறப்பு பிரமுகராக கலந்துக் கொண்டு சாதனையாளர்களை வாழ்த்தி பேசினார்.
டத்தொ மு.ஞானசேகரன் அவர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தி வெகுவாக பாராடினார்.
டத்தோஸ்ரீ க.புலவேந்திரன் அவர்கள் எழுச்சியுரை வழங்கினார்.
திரு.செல்வராஜன் மற்றும் அவரது குழுவினர்கள் மாணவர்களுக்கு மாலை மரியாதைகள் செய்து கௌரவித்ததோடு வாழை இலையில் உணவு வகைகள் பரிமாறி வருகையாளர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தனர்.
4 Jan 2026 News By: Kalaimany



ganapathy







\
