மலாயா நாட்டின் பிரதமராகவும் ஒரு நாள் பதவி வகித்தார். துன் வீ.தி சம்பந்தன்
“The Era Legends of Tun V. T. Sambanthan”
Date :03 May 2026 News By:RM Chandran
தோட்டத்தில் உழைக்கும் தொழிலாளர்களுக்கே முன்னுரிமை என்பது போல் தோட்டப் பட்டாளிகளுக்கு வீட்டுடமைத் திட்டத்தை அமல்படுத்தி, அதை நடைமுறைப் படுத்தியதும் தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம் என ஒவ்வொரு இந்தியரும் நெஞ்சை நிமிர்த்தி, மார்பு தட்டிச் சொல்ல வைத்தது.
கூட்டுறவு சங்கம் வாங்கியத் தோட்டங்களில், தமிழ்ப்பள்ளிகளும், ஆலயங்களும் அதே இடத்தில் நிலைப் பெற்று நிற்பது நாம் பெருமைப்பட வேண்டிய அம்சங்களாகும்.
அந்த முதலாவது தோட்டத் தொழிலாளர் வீட்டுடமைத் திட்டத்தை டோவன்பி தோட்டத்தில் அறிமுகப்படுத்தி வைத்தனர். அதே போல் பல்வேறு தோட்டங்களில் அறிமுகப்படுத்தி இருந்தாலும், சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ரிஞ்சிங் தோட்டத்தை நகரமயமாக்கியதில் (Bandar Rinching) சிரம்பான் தோட்டத்தை Bandar Seremban 2 என்று மாற்றியதும், தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தின் சாதனை என்றே கூற வேண்டும்.
85,000 சங்கத்தின் உறுப்பினர்கள் இருந்த நிலையில் தற்போது 66 ஆயிரம் உறுப்பினர்களுக்கு லாப ஈவு வழங்குவது, சங்கத்தின் உறுப்பினர் பிள்ளைகளுக்கு கல்வி உதவி நிதி, தீரதாத நோயில் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவி, கண் அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி, 60 வயதிற்கும் மேற்பட்டவருக்கு மாதாந்திர உதவி நிதி, மரண சகாய நிதி, சோமா மொழி இலக்கிய அறவாரித்தின் வருடாந்திர இலக்கிய போட்டிகள், உலக எழுத்தாளர்களின் நாவல் போட்டிகள் என ஏற்பாடு செய்து வருவதோடு பல சமூக மனித நேய உதவிகளை செய்வது பாராட்டுக்குறியது.
அன்றையக் காலகட்டத்தில் அனைவரும் துன் வீ்.தி. சம்பந்தன் என்ற ஒரு தனி மனிதரின் தலைமையிலான ஒரே அணியில் நின்று தோட்டங்களை வாங்குவதற்கு ஆதரவு கரம் கொடுத்த தோட்டப் பாட்டாளிகளின் ஒற்றுமைக்கு தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கமே சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது.
இன்று தலைநகர் ஜாலான் சுல்தான் சுலைமான் சாலையில் கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கிறது விஸ்மா துன் சம்பந்தன்.
அன்று கூட்டுறவுத் தந்தை என்று போற்றிப் புகழப்பட்ட துன் வீ.தி. சம்பந்தன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், பத்து பத்து வெள்ளியாய் தோட்டப்பட்டாளி மக்களிடையே திரட்டிய நிதி இன்று ஆலமரமாய் வேரூன்றி நின்று பலருக்கும், பல்வேறு விதமான உதவிகளை வழங்கி வருவதை யாராலும் மறுக்க முடியாது
.
ஐந்தாவது மஇகா தேசியத் தலைவராக பொறுப்பு ஏற்றப் பிறகு 1955ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் பேராக் கிந்தா, அதன் பிறகு சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று, தபால் தந்தித்துறை, சுகாதாரத் துறை, தொழிலாளர் அமைச்சு, ஒற்றுமைத் துறை அமைச்சாரகவும் பணியாற்றினார்.
அதேவேளை, மஇகா தேசியத் தலைவராக 18 ஆண்டு காலம் பதவி வகித்த போது மஇகாவின் 7 மாடி கட்டடத்தை 1969 ஆம் ஆண்டில் நிறுவினார்.
இலண்டன் சென்று மலாயா நாட்டின் சுதந்திரப் பிரகடனத்தில் இந்தியர்களின் பிரதிநிதியாகக் கையெழுத்திட்டார்.
மலாயா நாட்டின் பிரதமராகவும் ஒரு நாள் பதவி வகித்தார்.
தலைநகர், பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா பகுதியில், ஜாலான் துன் சம்பந்தன் 1,2,3, என்ற சாலைகளும, துன் சம்பந்தன் மோனோ ரயில் நிறுத்தமும் உள்ளன. அது மட்டுமன்றி, மோனோ ரயில் ஒவ்வொரு நாளும் அவரின் பெயரை உச்சரிப்பைச் செய்கிறது. சுபாங் ஜெயாவில் தேசிய வகை துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியும் அவர் பெயரில் இயங்கி வருகிறது.

தம் வாழ்நாள் முழுவதும் வெள்ளை நிற வேட்டி, ஜிப்பா அணிந்தே நமது பாரம்பரிய அடையாளத்தை வெளிப்படுத்தினார். எந்தவொரு ஆடம்பரமோ விலை உயர்ந்த காரிலோ துன் சம்பந்தன் அவர்கள் பவனி வராமல் நடுத்தரமான வாழ்க்கை வாழ்ந்தது, அவர் அடக்கத்தின் உச்சமாய், மனிதருள் மாணிக்கமாய், பண்பையும் ஒழுக்க நெறியை கடைபிடித்து வாழ்ந்தார் என்பதை இந்த நாடே அறியும்.
இதய நோய் காரணமாக 18-5-1979 ஆம் ஆண்டு தனது 59 வயதில் மறைந்தார்.
மண்ணில் மறைந்தாலும் மக்களின் மனங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் கூட்டுறவுத் தந்தை துன் வீ.தி சம்பந்தன்.
www.myvelicham.com www.myvelichamtv.com



ganapathy







\
