மலேசியா பொது போக்குவரத்தும் மக்கள் வாழ்வாதாரம்
“Malaysia public transportation and people’s livelihood.”
Date : 06 May 2026 Newsby: Muniandy Krishnasamy
மலேசியா பொது போக்குவரத்தும் மக்கள் வாழ்வாதாரம்
மலேசியாவில் பொது போக்குவரத்து அமைப்பு மக்கள் தினசரி வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. பேருந்துகள், ரயில்கள், எல்.ஆர்.டி (LRT), எம்.ஆர்.டி (MRT), மோனோரெயில், டாக்ஸிகள் மற்றும் ரைட்-ஹெய்லிங் சேவைகள் ஆகியவை நகரங்களிலும் புறநகரங்களிலும் பயணிகளுக்கு வசதியாக செயல்படுகின்றன.
பேருந்து சேவை: RapidKL போன்ற நிறுவனங்கள் குவாலாலம்பூர் மற்றும் சுற்றுப்புறங்களில் விரிவான பேருந்து வலையமைப்பை வழங்குகின்றன. ரயில் சேவை: KTM Komuter, LRT, MRT, Monorail ஆகியவை நகரப் பகுதிகளில் வேகமான மற்றும் மலிவான பயண வசதிகளை வழங்குகின்றன
.
இணைப்பு: விமான நிலையங்கள், வணிக மையங்கள், குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றை இணைக்கும் வகையில் போக்குவரத்து திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அரசாங்க முயற்சிகள்: போக்குவரத்து செலவுகளை குறைத்து, பொதுமக்களுக்கு எளிதான அணுகலை வழங்க அரசு பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
மலேசியாவில் பொது போக்குவரத்து சேவைகள் மக்கள் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, பேருந்துகள் மற்றும் ரயில்களின் நேர அட்டவணைகள் அடிக்கடி மாற்றம் அடைவதால், பயணிகள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.
பொது போக்குவரத்து நேர அட்டவணைகள் முறையாக பின்பற்றப்படாததால், வேலைக்குச் செல்லும் மக்கள் மற்றும் மாணவர்கள் தாமதம் அனுபவிக்கின்றனர். இதனால், பொதுமக்களின் திருப்தி குறைந்து வருகிறது.
அரசாங்கம், போக்குவரத்து சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூகத்தில் வலுப்பெற்று வருகிறது.
மக்கள், மலேசியாவின் பொது போக்குவரத்து சேவைகளில் நேர மேலாண்மை தொடர்பான அதிகப்படியான வசதிகளை எதிர்பார்த்து வருகின்றனர். குறிப்பாக Papitbus மற்றும் KTM போன்ற பொது போக்குவரத்து நிறுவனங்கள், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்களுக்கான பருவகால உச்சநேரங்களில் (peak time) பயணிகள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அட்டவணைகளைச் சரியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பயணிகள், நேரத்திற்கு ஏற்ற வகையில் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் இயக்கப்பட வேண்டும் என்றும், உச்சநேரங்களில் கூடுதல் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
அரசாங்கத்தின் கீழ் செயல்படும் Prasarana Malaysia Berhad என்ற GLC நிறுவனம் வழங்கும் பொது போக்குவரத்து சேவைகள் குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் எதிர்பார்த்த தரத்தில் இல்லை என்பதால், பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக, நேர அட்டவணை பின்பற்றப்படாமை மற்றும் சேவை தரம் குறைவாக இருப்பது குறித்து சமூகத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கூட்டாட்சி GLC நிறுவனம் Prasarana Malaysia Berhad மற்றும் KTM வழங்கும் உள்ளூர் ரயில் சேவைகள், பொதுமக்களுக்கு 20 நிமிடங்கள் அல்லது 40 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன. இதனால், தனியார் போக்குவரத்துடன் ஒப்பிடும்போது அதிக செலவில்லாமல் எளிதான பயண வசதி கிடைக்கிறது.
ஆனால், பொதுமக்களின் சம்பளம் உயர்த்தப்படாத நிலையில், மலேசியா முழுவதும் சுங்கச்சாவடி (toll) கட்டணங்கள் காரணமாக மக்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். GE15 தேர்தலுக்குப் பிறகு, வாழ்க்கைச் செலவுகள் மேலும் அதிகரித்துள்ளதாக சமூகத்தில் அதிருப்தி வெளிப்படுகிறது.
மக்கள், நல்ல கல்வி செலவு, போக்குவரத்து வசதி, நியாயமான உணவுப் பொருள் விலை, மற்றும் சுகாதாரச் செலவுகள் குறைவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். தற்போது சுகாதாரச் செலவுகள் மிக அதிகமாக உள்ளதால், அரசாங்கம் மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தனியார் துறையில் மாத சம்பளம் உயர்த்தப்படாத நிலையில், வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருகின்றன. எதிர்கால தலைமுறையை முன்னிட்டு, வரவிருக்கும் GE16 தேர்தலில் மக்கள் தங்களின் பொருளாதார பிரச்சினைகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
www.myvelicham.com
Myவெளிச்சம் கண்டா ஆய்வுகள்.
ஆய்வுகள்



ganapathy







\
