கூட்டாட்சி நிறுவனங்களின் கீழ் உள்ள வணிக வளாகங்களின் வாடகை குறைக்க பிரதமர் உத்தரவு

The Prime Minister has ordered a reduction in rental rates for business premises under federal agencies.

கூட்டாட்சி நிறுவனங்களின் கீழ் உள்ள வணிக வளாகங்களின் வாடகை  குறைக்க பிரதமர் உத்தரவு

Date: 06 May 2026     News By: Muniandy Krishnasamy 

புத்ராஜாயா: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கூட்டாட்சி அரசாங்கத்தின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின் வளாகங்களுக்கான வாடகை விகிதங்களை இம்மாதம் தொடங்கி குறைக்க உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சிறு வணிகர்கள் தங்களின் செயல்பாட்டு செலவுகளை குறைக்க உதவுவதே நோக்கம்.

அவர் கூறியதாவது, உலகளாவிய விநியோக நெருக்கடியால் பாதிக்கப்பட்ட வணிகர்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துநர்களுக்கு உதவ அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியாகும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  தனது சந்திப்பில் தெரிவித்தார்.