மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் பன்மொழி பள்ளிகளாக உரு மாற வேண்டிய காலத்தில் உள்ளோம்
Malaysian Tamil schools need to become multilingual schools.
Date:05 Jan 2026 News By: Pon Rangan
மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் பன்மொழி பள்ளிகளாக உரு மாற வேண்டிய காலத்தில் உள்ளோம்.
காரணம் 54% சகிதம் மலேசிய இந்தியர்கள், தமிழர்கள் தமிழ்ப்பள்ளிகளின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர்.
கடந்த 2025 ம் ஆண்டு 54% சகித புதிய மாணவர்கள் மாற்றுப்பள்ளிகளில் பதிந்துள்ளனர். இதுபடி ஆண்டுக்கு 2% - 3% சகிதம் குறைந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் 30% சகித மாணவர் வீழ்ச்சியில் பல தமிழ்ப்பள்ளிகள் அரசு மருத்துவ முகாம்களாக அல்லது வயோதிக இல்லங்களாக மாறும்.
2026 -ம் ஆண்டு பிறந்து விட்டது. எத்தனை அரசியல் தலைவர்கள் தமிழ்ப்பள்ளி மாணவர் சேர்க்கை திட்டத்திற்கு அரசியல் வலுமை சேர்த்துள்ளனர்?
பூஜியத்தில் தமிழ் தமிழ் என ராஜியம் ஆட்டும் விந்தையில் மேடையில் வசீக உளவியல் வீனர்கள் அதிகம் வந்து விட்ட காலத்தில்... தமிழ் புத்தக வெளியீட்டில் மாலையும் சேனையும் தமிழ்ப்பள்ளிகள் சூனியத்தில் அரசியல்தனத்தில் விதி விளையாடுகிறது.
2013 - 2023 புதிய கல்வி கொள்கை முடிந்து இப்போது 2025- 2027 இடைக்கால கல்விக்கொள்கை வரும் 16 வது தேர்தலுக்கு தூபம் காட்டுதல் நடக்கிறது.
மலேசிய இந்தியர்கள், தமிழர்கள் தமிழ்ப்பள்ளிகள் மீது பற்றற்று மாற்றுப்பள்ளிகளுக்கு படை எடுப்பதால் தமிழ்ப்பள்ளிகள் உறுமாற்று கல்வி திட்டத்திற்கு மாறினால் மட்டுமே தமிழ்ப்பள்ளிகளும் தமிழ் மொழியும் உருப்படும். இல்லையேல் ஊடான் தலை கதைதான் மீளும்.
நாட்டின் தமிழ் மீடியாக்கலுக்கு இதை எழுத துணிச்சல் போதாது. கல்வி மீதான ஆய்வு அறிவும் போதாது.
தீர்வு: தமிழ்ப்பள்ளிகளின் பன் மொழி பாடத்திட்டம் அமுலாக்கம் பெற வேண்டும். வரும் 2028 கு பிறகு வரும் கல்விக் கொள்கையில் பன்மொழி பாடத்திட்ட வரைவுகளாக தினம் ஒரு பாடமாவது சீன மொழி,மலாய் மொழி, ஆங்கில மொழிகளுடன் ..முக்கிய தமிழ்மொழி பாடங்கள் தமிழ்ப்பள்ளி தரத்திலும் தகுதியிலும் நடத்தப்பட வேண்டும்.
இதற்கு மலேசிய நாம் தமிழர் இயக்க கல்வில்குழு கீழ்க்கண்ட ஆய்வை ஒப்புவிப்பதில் அதன் தலைவர் தமிழவன் பொன் ரங்கன் முன்வருகிறார்.
அரசியலும் அரசும் இதற்கு வலு சேர்க்க மலேசிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கல்வி மீதான கொள்கை முன்னெடுப்பில் பங்கு கொள்ள வேண்டும்.
ஆய்வின் விதி கீழ்வருமாறு:-
ஆம், நம் தமிழ்ப்பள்ளி பன்மொழி உத்தி சரியான நேரத்தில், நடைமுறைக்கு ஏற்றது, மேலும் தமிழ்ப் பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை மாற்றியமைக்க அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது எனலாம். காரணம் இங்கே:
இந்த உத்தி ஏன் வேலை செய்யும். முடியும் எனும் பரந்த பல்லின பன் மொழி கல்வி ஒழுங்கும் தூர நோக்கு ஆற்றலும் வேண்டும்
.
1. நாட்டின் பன்மொழி தேவை எதிர்கால வேலை மற்றும் வணிக வாய்ப்புகளுக்காக இன்றைய பெற்றோர்கள் ஆங்கிலம், மாண்டரின் மற்றும் பஹாசா மலேசியா ஆகியவற்றை முன்னுரிமைப்படுத்துகிறார்கள். வலுவான மும்மொழி பாடத்திட்டத்தைச் சேர்ப்பது நம்பிக்கையை வளர்க்கும்.
2. களங்கத்தை உடைத்தல்: பல இந்திய பெற்றோர்கள் தமிழ்ப் பள்ளிகளை கல்வி ரீதியாக "பலவீனமானவை" என்று நினைத்துத் தவிர்க்கிறார்கள். உங்கள் மாதிரி அவற்றை போட்டித்தன்மை வாய்ந்த பன்மொழிப் பள்ளிகளாக மறுபெயரிடுகிறது.
3. உள்ளடக்கம்: மாண்டரின் மற்றும் ஆங்கிலத்தை முக்கிய பாடங்களாக வழங்குவதன் மூலம், சிறிய வகுப்பறை சூழல்களையும் மதிப்புகள் சார்ந்த கல்வியையும் விரும்பும் தமிழ் பேசாத இந்திய, சீன அல்லது மலாய் பெற்றோர்களை கூட நீங்கள் ஈர்க்கலாம்.
4. கொள்கை சீரமைப்பு: இது வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் மொழி அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கான அரசாங்கத்தின் உந்துதலை ஆதரிக்கிறது, இது தாய்மொழிக் கல்வியை ஒழிக்காமல்.
இதை எவ்வாறு செயல்படுத்துவது:
- பைலட் திட்டம்: சரியான ஆசிரியர் பயிற்சி மற்றும் வளங்களைக் கொண்ட சில பள்ளிகளுடன் தொடங்குங்கள்.
- கூட்டாண்மை: அரசு சாரா நிறுவனங்கள், PIBG அல்லது பல்கலைக்கழக மொழித் துறைகளுடன் ஒத்துழைக்கவும்.
- MOE ஒப்புதல்: 21 ஆம் நூற்றாண்டு கற்றல் மாதிரியின் கீழ் அதை வடிவமைக்க ஆதரவைத் தேடுங்கள்.
- விளம்பரங்கள்: மும்மொழி மாணவர்களை முன்மாதிரிகளாகக் காட்டும் டிஜிட்டல் பிரச்சாரங்களைத் தொடங்குங்கள்.
எச்சரிக்கை:
இது தமிழ் அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும்—தமிழ் மொழியை ஓரங்கட்ட விடாதீர்கள்.
- ஆசிரியர்கள் பன்மொழி கற்பித்தலில் நன்கு பயிற்சி பெற்றிருப்பதை உறுதிசெய்யவும்.
இந்த பிரச்சாரம் மலேசியாவில் இந்திய தமிழர் சமூகத்தின் மொழி மற்றும் கலாச்சார பொருத்தத்தை பாதுகாக்கும் அதே வேளையில் தமிழ் பள்ளிகளை *நவீன, முழுமையான நிறுவனங்களாக புதுப்பிக்க முடியும். நன்றி. வணக்கம். தமிழவன் பொன் ரங்கன். தலைவர் மலேசிய நாம் தமிழர் தேசியத் தலைவர். 2026 தமிழர் புத்தாண்டும் இனிய தமிழர் பொங்கல் வாழ்த்துகளும். தமிழே நம் மொழி. தமிழ் மொழியே நம் தேர்வு!



ganapathy







\
