ஜோகூர் MCMC – 5G – யை அதிகரிக்கவும், இணைய வேகத்தை துரிதப்படுத்தும்.ம்

Johor MCMC 5G, speed up internet speeds

ஜோகூர் MCMC – 5G – யை அதிகரிக்கவும், இணைய வேகத்தை துரிதப்படுத்தும்.ம்
ஜோகூர் MCMC – 5G – யை அதிகரிக்கவும், இணைய வேகத்தை துரிதப்படுத்தும்.ம்

27 APRIL 2025 News By:GanapathyKrishnasamy 

ஜோகூர் MCMC  5G யை அதிகரிக்கவும், இணைய வேகத்தை துரிதப்படுத்தவும் கையெழுத்திடப்பட்டது.

உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், இணைய வலையமைப்பு தொடர்பை விரிவுப்படுத்தவும், இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு குறித்த பொது விழிப்புணர்வை மேம்படுத்தவும், மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் MCMC ஜோகூர் மாநில அரசாங்கத்துடன் ஓர் உடன்பாட்டில் இணைந்துள்ளது என தொடர்புதுறை அமைச்சர் டத்தோ Fahmi Fadzil தெரிவித்தார்.  

அண்மையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கீழ், இந்த முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதிசெய்வதற்கு இரண்டு ஆண்டுகளில் RM300 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார். 

திட்டமிடப்பட்ட முயற்சிகளில் 5G இணைய தொடர்பை விரிவுப்படுத்துவது குறிப்பாக, ஜோகூர் – சிங்கப்பூர் இடையிலான சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (JS-SEZ) உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

இந்த முயற்சி பல கட்டங்களை உள்ளடக்கும். முதலாவதாக இணைய தொடர்பை விரிவுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதுடன், JS-SEZ போன்ற பகுதிகளில் போதுமான இணைய வசதி இருப்பதையும், 5G தொழில் நுட்பத்திலிருந்து முழுமையாக பயனடைய முடியும் என்று, 
 இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின்போது கூறினார்.   

இதன்வழி டிஜிட்டல் பொருளாதாரத்தில் சமூக பங்களிப்பையும் அதிகரிப்பற்கான திறன் மேம்பாடு, பயிற்சித் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு, ஆலோசனைத் திட்டங்கள் ஆகியவையும் இவற்றில் அடங்கும். 

இந்நிகழ்ச்சியில் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹாபிஸ் காசி, மாநில பொதுப்பணி, போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்புக் குழுத் தலைவர் முகமட் ஃபாஸ்தி முகமட் சாலே, MCMC நிர்வாகத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் சலிம் ஃபதே டின் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

நன்றி. Bernama

www.myvelicham.com