புதிய அதிகபட்ச வர்த்தக மதிப்பை மலேசியா பதிவு செய்துள்ளது

புதிய அதிகபட்ச வர்த்தக மதிப்பை மலேசியா பதிவு செய்துள்ளது

புதிய அதிகபட்ச வர்த்தக மதிப்பை மலேசியா பதிவு செய்துள்ளது
புதிய அதிகபட்ச வர்த்தக மதிப்பை மலேசியா பதிவு செய்துள்ளது

கோலாலம்பூர்: July 2022 இல் மலேசிய வர்த்தகம், முறையே வர்த்தகம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான அதிகபட்ச மதிப்புகளைப் பதிவு செய்து ஊக்கமளிக்கும் செயல்திறனைத் தக்கவைத்து வருகிறது.

ஜூன் 2021-இல்லிருந்து வர்த்தகம் 43.4 விழுக்காடு அதிகரித்து ரி.ம 270.39 பில்லியனாக இருந்தது. இது தொடர்ந்து 17வது மாதமாக இரட்டை இலக்க வளர்ச்சியாகும்.

இதற்கிடையில், ஏற்றுமதிகள் தொடர்ந்து 11வது மாதமாக இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவுசெய்து, 38.8 விழுக்காடு அதிகரித்து ரி.ம 146.16 பில்லியனாகப் பதிவாகியுள்ளது.

இறக்குமதிகள் 49.3 விழுக்காடு வளர்ச்சியடைந்து ரி.ம 124.23 பில்லியனாகவும், வர்த்தக உபரி 0.8 விழுக்காடு குறைந்து ரி.ம 21.93 பில்லியனாகவும் உள்ளது.

ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கியமாக மின்சாரம் மற்றும் மின்னணு (E&E) பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மற்றும் பாமாயில் ஆகியவற்றின் வலுவான தேவை காரணமாக இருந்தது என்று அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

முக்கிய வர்த்தக பங்காளிகளான ஆசியான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதிகள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

ஆசியான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அதிக மாதாந்திர ஏற்றுமதி மதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஒரு மாத அடிப்படையில், வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வர்த்தக உபரி முறையே 18.4 விழுக்காடு, 21.3 விழுக்காடு, 15.2 விழுக்காடு மற்றும் 72.7 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.

2021-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2022-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான வர்த்தகம் 32.7 விழுக்காடு அதிகரித்து ரி.ம 730.36 பில்லியனாக உள்ளது என்று மொஹமட் அஸ்மின் கூறினார்.