இந்திய மாணவர்களின் மெட்ரிகுலேஷன் விண்ணப்பங்கள் நிராகரிப்பு.

இந்திய மாணவர்களின் மெட்ரிகுலேஷன் விண்ணப்பங்கள் நிராகரிப்பு.

இந்திய மாணவர்களின் மெட்ரிகுலேஷன் விண்ணப்பங்கள் நிராகரிப்பு.
டத்தோ நெல்சன் ரெங்கநாதன்

ஜூலை 28ஆம் தேதிக்குள் மேல்முறையீடு செய்ய ஆலோசனை
ம.இ,கா கல்விக்குழு உதவும்
ம.இ.கா கல்விக்குழு தலைவர் செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் தகவல்

கோலாலம்பூர், ஜூலை 26-
நாட்டில் 200க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் மெட்ரிகுலேஷன் கல்வி  விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டிருப்பது மலேசிய இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மெட்ரிகுலேஷன் கல்வி பயில விண்ணப்பித்த மாணவர்களும் அவர்களின அதிருப்தியையும் ஏமாற்றத்தையும்  வெளிபடுத்தியுள்ளதால்  அவர்கள் ஜூலை 28ஆம் தேதிக்குள் மேல்முறையீடு செய்வதோடு அதன் நகல் ஒன்றையும் ம.இ.கா கல்விக்குழுவிடம் வழங்குமாறு அதன் தலைவர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் ஆலோசனை கூறினார்.

எஸ்.பி.எம் தேர்வில் அனைத்து பாடங்களிலும் ஏ எடுத்த மாணவர்கள் மெட்ரிகுலேஷன் கல்வி பயில விண்ணப்பம் செய்தும் விண்ணப்பம் நிராகரிப்பு அல்லது மேல்முறையீடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்
மெட்ரிகுலேஷன் கல்வி இம்மாத இறுதியில் தொடங்குவதால் முறையீடு செய்ய மாணவர்களுக்கு போதிய அவகாசம்
இல்லை. இதற்கு மேல்முறையீடு விண்ணப்பத்திற்கான இறுதி நாள் ஜூலை 28ஆம் தேதி என்பதால் மாணவர்கள் விரைந்து விண்ணப்பம் செய்யும்படி டத்தோ நெல்சன் ரெங்கநாதன் கேட்டுக் கொண்டார்.

இம்மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்து முறையாக காரணங்கள் வழங்கப்பட வேண்டும். அத்துடன் கல்வி அமைச்சின் முறையான வழிகாட்டுதல்களும் மெட்ரிகுலேஷன் தொடர்பான விண்ணப்ப முறைகளையும் விளக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் 10 விழுக்காடு மெட்ரிகுலேஷன் கல்விக்கான இடங்கள் பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் அனைத்து மெட்ரிகுலேஷன் கல்வி இடங்களும் நிரப்படுகிறதா என்பது கேள்விக்குறியே. இந்த விவகாரம் தற்போது ம.இ.கா கல்விக்குழு பக்கம் திரும்பியுள்ளது. ம.இ.கா கல்விக்குழு இந்த விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சிடம் மேல்முறையீடு செய்யும் என்றும் இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேஷன் கல்வி பயில வேண்டும் என கல்வி கழகம் உறுதியாக இருப்பதாக ம.இ.கா கல்விக்குழுவின் தலைவரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பானது விண்ணம் செய்த இந்திய மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும். மெட்ரிகுலேஷன் கல்வியை படித்து முறையாக மேற்கல்வியை தொடர வேண்டும், இதுவே ம.இ.கா கல்வி குழுவின் இலக்காகும் எனவும் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் குறிப்பிட்டார்.