சூப்பர் மைன் டைனமிக் கல்வி இயக்கத்தின் ஏற்பாட்டில் பரிசளிப்பு விழா

SPM Prize distribution ceremony organized by Super Mine Dynamic Education Movement

சூப்பர் மைன் டைனமிக் கல்வி இயக்கத்தின் ஏற்பாட்டில்  பரிசளிப்பு விழா

08 July 2023

தேர்வு செய்யப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுக்கும் கடந்தாண்டு எஸ் பி எம் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஏக்கள் (A+ & A) பெற்ற இந்திய மாணவர்களுக்கும் சூப்பர் மைன் டைனமிக் அரசு சார்பற்ற கல்வி இயக்கத்தின் ஏற்பாட்டில்  பரிசளிப்பு விழா. 

 தமிழும் தமிழரும் பாரினில் தலைநிமிரும் நாளே நன்னாள். பாரதிதாசன் கனவை நினைவாக்கிட  அரசு சார்பற்ற கல்வி இயக்கமான சூப்பர் மைன் டைனமிக் கல்வி இயக்கம் கல்வி தொடர்பான பல்வேறு தன்முனைப்பு, கல்வி கருத்தரங்கு, தேர்வு வழிகாட்டி பயிலரங்கம், உள்நாட்டு தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை அரசு ஆதரவு தந்து அதற்குரிய தொகையினைத் தர பெரும் போராட்டம்;தொடர் முயற்சிகள் செய்து வருவதை மக்கள் அறிவர். அந்த வகையிலே கடந்தாண்டு தேர்வு செய்யப்பட்ட 40 எழுத்தாளர்களுக்குரிய தொகையினைக் கூடிய விரைவில் வழங்க உள்ளோம். தவிர்க்க முடியாத சில காரணங்களால் சற்று தாமதமாக வழங்குவதற்கு எழுத்தாளர்கள் பொறுமை காத்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வினிய நிகழ்வோடு கடந்தாண்டு 2022-ல் எஸ் பி எம் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் A & A+ பெற்ற அனைத்து இந்திய மாணவர்களுக்கு சிறப்பான வெகுமதியுடன் பரிசளிப்பு விழா ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளோம். 
 எஸ் பி எம் தேர்வில்  தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய இரண்டு பாடத்திலும் குறைந்தது 'A' பெற்றிருப்பது கட்டாயமாகும். 
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேர்ச்சியைப் பெற்றுள்ள  மாணவர்கள் தங்களது எஸ் பி எம் நகலைப் பள்ளியின் முதல்வரின் கையொப்பத்துடன் உறுதி செய்யப்பட்டு கீழ்காணும் முகவரிக்கு வருகின்ற 17.7.2023 திங்கட்கிழமைக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விதிமுறைகளுக்கு உட்படாத தேர்ச்சி அறிக்கை நிராகரிக்கப்படும்.

நிகழ்ச்சி நடைபெறும் நேரம், இடம் ஆகிய விபரங்கள் தங்களுக்கு நாளிதழின் வழி தெரிவிக்கப்படும். குறிப்பிட்ட தேதியில் அனுப்பப்படாத மனுக்கள்  ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தங்களின் மனுவோடு வீட்டு முகவரி, தொலைபேசி எண் மற்றும் உடன் வருபவர்களின் எண்ணிக்கையைத் தயவு கூர்ந்து தெரிவிக்கவும்.

தமிழ் மொழி மேம்பாட்டிற்கு நேரம் காலம் பாராது தியாகங்கள் செய்யும் நம்முடைய மாநில கல்வி அதிகாரிகள்,  இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள்  அனைவரும் தயவு கூர்ந்து இந்தச் செய்தியினைப் பரவச் செய்ய வேண்டுகிறோம்.

இந்த நிகழ்ச்சி நூறு சதவிகிதம் தன்னார்வ அடிப்படையில் நமது தமிழ் மொழிக்கும் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் நல் உள்ளங்களாலும் நன்கொடையாளர்களின் ஆதரவோடும் வழிகாட்டலோடும் சூப்பர் மைன் டைனமிக் கல்வி இயக்கத்தால் நடத்தப்படுகிறது.

முகவரி:-M. GENASAN NO; 5523 JALAN NGP 1/5 NEW GREEN PARK  48000 RAWANG SELANGOR. 

தொடர்புக்கு:- திரு.கணேசன் 012-6587328