அந்நியத் தொழிலாளர் விவகாரத்தில் அனைவருக்கும் அனுகூலம் தரும் அணுகுமுறை- குணராஜ்

Gunaraj: Approach that will benefit everyone in case of foreign workers

அந்நியத் தொழிலாளர் விவகாரத்தில் அனைவருக்கும் அனுகூலம் தரும் அணுகுமுறை- குணராஜ்

06 Sept 2023

இந்தியர்களின் பாரம்பரியத் தொழில்களாக விளங்கும்
சிகையலங்காரம், ஜவுளி மற்றும் நகை வியாபாரத் துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களை தருவிக்க அனுமதிக்கப்படும் என்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிவிப்பை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர்
டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வரவேற்றுள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்பு
ஆக்ககரமான மற்றும் முன்னோக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது
என்று அவர் வர்ணித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பின் வழி இந்த மூன்று துறைகளைச் சேர்ந்த
வர்த்தர்களும் நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த தொழிலாளர்
பற்றாக்குறைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் குறிப்பிடத்தக்க
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

இந்திய வர்த்தகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தங்களின்
பொறுப்புணர்வை வெளிப்படுத்திய அரசாங்கத்திற்கு குறிப்பாக, மனிதவள அமைச்சர் வ.சிவக்குமாருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.செந்தோசா சட்டமன்ற உறுப்பினர்
டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வரவேற்றுள்ளார்