வர்த்தகர்களின் இலக்கவியல் விரிவாக்கத் திட்டத்திற்கு வெ.50,000 வரை கடன் உதவி- ஹிஜ்ரா வழங்குகிறது

Hijra provides loan assistance of up to Rs 50,000 for the digital expansion plan of traders

வர்த்தகர்களின் இலக்கவியல் விரிவாக்கத் திட்டத்திற்கு வெ.50,000 வரை கடன் உதவி- ஹிஜ்ரா வழங்குகிறது

02 Sept 2023

யாயா சான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியம்  மாநிலத்தில் உள்ள தொழில் முனைவோரை “கோ டிஜிட்டல் ஹிஜ்ரா” திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் உதவிக்கு  விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் தொழில் முனைவோர் 50,000 வரை கடன் உதவி பெற இத்திட்டம் வகை செய்கிறது.

தொழில் முனைவோர் தங்களது வணிக முறைகளை சமீபத்திய மற்றும் நவீன தளங்களின் வாயிலாக இலக்கவியலுக்கு மாற்றுவதற்கு உதவும் நோக்கில் இந்த “Go Digital Hijrah” திட்டம் உருவாக்கப்பட்டது.

இலக்கவியல்  வணிக மார்க்கெட்டிங்  மூலம் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்தும் முறையை மேம்படுத்தி அதன் வாயிலாக  இணைய விற்பனையில் லாபம் அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும் என்று ஹிஜ்ரா தனது முகநூல் பதிவில் கூறியுள்ளது.

இந்த கடனுதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், http://mikrokredit.selangor.gov.my/ வாயிலாக  அல்லது ஹிஜ்ரா அறவாரியத்தின் 19 கிளைகளில்  ஒன்றைத் தொடர்பு கொள்ளலாம்.

ஹிஜ்ரா அறவாரியம் Go Digital திட்டம் தவிர, Hijrah, i-Busness, Zero to Hero, Niaga Darul Ehsan (NaDI), i-Agro, i-Lestari மற்றும் i-Bermusim போன்ற பிற திட்டங்களையும் வழங்குகிறது.

இத்திட்டத்தில் பங்கு பெறுவதற்கான நிபந்தனைகள் வருமாறு:

  • மலேசிய குடிமகனாக இருக்க வேண்டும்.

*   ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிலாங்கூரில் வசிப்பவர் அல்லது நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

  • சிலாங்கூரில் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருப்பது அவசியம்

*   ஏற்கனவே  வணிகத்தை நடத்திக் கொண்டிருக்க வேண்டும்.

  • பிரத்தியேக வணிக வளாகத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் 18 முதல் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

  www.myvelicham.com