1.1 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர் வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது...வ.சிவகுமார்

1.1 million foreign workers were allowed to work... V. Sivakumar

1.1 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர் வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது...வ.சிவகுமார்
1.1 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர் வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது...வ.சிவகுமார்

04July 2023

பழைய உலோக பொருள்மறுசுழற்சி  துறையில் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்வது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர்                                    வ.சிவகுமார் இன்று அறிவித்தார்.

இந்த விவகாரத்தை மனிதவள அமைச்சு கவனத்தில்
கொள்ளும் என்றும் இன்று வெளியிட்ட அறிக்கையில்
சுட்டிக் காட்டினார். வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்வது தொடர்பில் மனிதவள அமைச்சு ஏற்கனவே தகவல் அளித்துள்ளது.

பல துறைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கான விண்ணப்ப செயல் முறையை
இவ்வாண்டு ஜனவரி 25 ஆம் தேதி மனிதவள அமைச்சு

அமல்படுத்தியது. இதில் உலோக பொருள் மறுசுழற்சி
துறையையும் மனித வள அமைச்சு கணக்கில் எடுத்துக்
கொண்டது.

இருப்பினும், மார்ச் 18 ஆம் தேதி அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு
அமர்த்தி கொள்ள விண்ணப்ப ஒதுக்கீடு ஒப்புதல் செயல்முறையை

தற்காலிகமாக நிறுத்த அமைச்சு முடிவு செய்தது.                                      மலேசியாவில் அனைத்து துறைகள், துணை துறை
உட்பட வெளிநாட்டு பணியாளர்களை ஆட்சேர்ப்பு
செய்தல் மற்றும் உலோக பொருள் மறுசுழற்சி
துறை அங்கீகாரத்தை உறுதி செய்வதற்காக இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கிட்டதட்ட 1.1 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்
வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் நாட்டின்
பொருளாதார வளர்ச்சியை பாதிக்காமல் இருக்க
உள்ளூர் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகளை உறுதி                    செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது

.இருப்பினும் உலோக பொருள் மறுசுழற்சி துறையில் வெளிநாட்டு
தொழிலாளர்களை பணியமர்த்துவது தொடர்பில்
உரிய கவனம் செலுத்தப்படும் என்று  என்று மனிதவள அமைச்சர்                 வ.சிவகுமார் இன்று அறிவித்தார்.