ஞானக் கண்ணால் அதிசயம் தமிழ்ப்பள்ளி மாணவி புனிதமலர்

Punitha Malar, a student of Magilampoo Tamil School, has created a miracle with the eye of knowledge.

ஞானக் கண்ணால் அதிசயம்  தமிழ்ப்பள்ளி மாணவி புனிதமலர்

கோலாலம்பூர், 25May 2023 

கண்ணைக் கட்டிக் கொண்டு தனது ஞானக் கண்ணால் அதிசயம் படைத்துள்ளார் மகிழம்பூ தமிழ்ப்பள்ளி மாணவி புனிதமலர். அம்மாணவி கண்ணைக் கட்டிக்கொண்டு பொருள்களைத் தடவியும் அல்லது தொட்டு பார்த்தும் அதன் நிறங்களையும் மற்றும் எண்களையும் சரியாகச் சொல்லும் திறனைப் பெற்றுள்ளார்.

 திரு இராஜசேகர் திருமதி சிவசங்கரி தம்பதினரின் ஒரே புதல்வி ஆவார் மாணவி புனிதமலர். இம்மாணவி தனது சிறு வயது முதல் மனனம் செய்வதில் அதிக நாட்டம் காட்டியுள்ளார். இதன்மூலம் பள்ளியில் நடைபெறும் கதை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடியிருக்கும் அம்மாணவியின் திறமையைக் கண்டு பள்ளி நிர்வாகம் அவரை “சூப்பர் மெமோரி“ எனும் நினைவற்றால் பயிற்சி ஒன்றில் கலந்து கொள்ள ஊக்குவித்தது

.

புனிதமலர் சூப்பர் மெமோரி பயிற்சியில் தொடர்ந்து நான்கு மாதம் கலந்து கொண்டு தன்னிடம் உள்ள திறமையால் மிக விரைவாக அதில் உள்ள நுட்பங்களையும் நுணுக்கங்களையும் கற்று கொண்டார். அதன் பின்னர், தன்னால் கண்களை மூடியவாறு பொருட்களின் நிறங்களைச் சொல்ல முடியும் என்ற தனித்திறமை தன்னிடம் ஒளிந்திருந்ததைக் கண்டறிந்ததாக புனிதமலர் கூறினார்.

மேலும், தன்னிடம் உள்ள திறமையை எண்ணி அம்மாணவி பெருமிதம் அடைந்தார். அதுமட்டுமில்லாமல் அப்பயிற்சிக்குச் செல்லுவதால் தன்னால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடிகிறது என்றார்.

www.myelicham.com Share :myvelicham.com face book