புகைப்பிடிப்பதனால் மலேசியாவில் சுமார் 20,000அதிகமானோர் பலியாகின்றனர்

Smoking kills more than 20,000 people in Malaysia

புகைப்பிடிப்பதனால் மலேசியாவில் சுமார் 20,000அதிகமானோர் பலியாகின்றனர்

கோலாலம்பூர், 7June 2023

 தொபகோ எனும் புகையிலையை  உள்ளிழுப்பதால் உலக அளவில் ஆண்டுக்கு சுமார் 70 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பதாக உலகச் சுகாதார நிறுவனமான “WHO“யின் தரவுகள் காட்டுகின்றன.

இந்நிலையில் இது கட்டுப்படுத்த படாவிட்டால் 2030ஆம் ஆண்டின் போது மேற்கண்ட எண்ணிக்கை 80 லட்சத்தைக் கடக்கும் என்று அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

அதே வேளையில் புகைப்பிடிப்பதனால் மலேசியாவில் சுமார் 20,000 அதிகமானவர்கள் பலியாகின்றனர். தற்போது சிகரெட்டைக் கடந்து வேப் மற்றும் மின்னியல் சிகரெட் பதின்ம வயதினர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ள இளம் சமுதாயத்தினரால் மரண எண்ணிக்கையும் நாளடைவில் அதிகரிக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஆய்வு மற்றும் கல்வி பிரிவின் அதிகாரி என்.வி.சுப்பாராவ் தெரிவித்தார். இப்பழகத்தின் வழி நுரையீரல் புற்றுநோய் வரக்கூடும் என அவர் எச்சரித்தார்.

மேலும், B40 பிரிவைச் சேர்ந்த 40 விழுக்காட்டினர் இந்த புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ள நிலையில் M40 மற்றும் T20 பிரிவினர் அவர்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.  இந்த பழக்கத்திற்கு செலவிடும் பணத்தை நல்ல உணவு முறையைக் கடைப்பிடிக்க பயன்படுத்தலாம் என்று அவர் பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.

www.myelicham.com