எவரெஸ்ட் உட்பட் உலகின் ஏழு மலைகளின் உச்சியை அடைந்து நாகராஜன் சாதனை

Nagarajan reaches the top of seven mountains of the world, including Everest

எவரெஸ்ட் உட்பட் உலகின் ஏழு மலைகளின் உச்சியை அடைந்து நாகராஜன் சாதனை
எவரெஸ்ட் உட்பட் உலகின் ஏழு மலைகளின் உச்சியை அடைந்து நாகராஜன் சாதனை

கோலாலம்பூர், 23 May 2023

  எவரெஸ்ட் மலையின் உச்சியைத் தொட்டதன் மூலம் உலகில்  ஏழு உயரமான மலைகளை  ஏறிய இரண்டாவது மலேசியர் என்ற பெருமையை  ஆர்.ஜே. நாகராஜன் பெறுகிறார்.

ஐம்பத்தொன்பது வயதுடைய நாகராஜன் உள்ளூர் நேரப்படி காலை மணி 10 .30 அளவில் அதாவது   மலேசியா நேரப்படி  நேற்று நண்பகல்   12.45 மணியளவில் எவரெஸ்ட்  மலையை வெற்றிகரமாக ஏறியதாக   ஜீரோ டு 8000 எனும் மலையேறும் அமைப்பின் நிறுவனரான காஃபிஷ் பாச்சோக்  தெரிவித்தார்.

மலையேறுபவர்களின்  உச்சபட்ச வெற்றி என்பது 8,848 மீட்டர் உயரம் கொண்ட    எவரெஸ்ட் மலையின் உச்சியை தொடுவதுதான். அந்த சாதனையை  நாகராஜன்  அடைந்துவிட்டார்  என அவர்  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்

.

இதற்கு முன் டத்தோ முகமது முஹபர்டின் என்பவர்    உலகின் ஏழு உயரமான மலைகளையும் ஏறிய முதல சாதனையாளர் என்ற பெருமையை  பெற்றிருந்தார்.

தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அண்டார்டிக்கா,ஆஸ்திரேலியா ஆசிய ஆகிய கண்டங்களில் உள்ள ஏழு உயர்ந்த மலைகளை ஏறியதன் வழி நாகராஜன் இந்த சாதனையைப் பெற்றுள்ளார்.

நாகராஜன் இன்னும் பல சாதனைகள் பெற வெளிச்சம் மீடியா group வாழ்த்துகின்றது

நீங்களும் உங்கள் தகவல்களை எங்களுக்கு அனுப்பலாம் 3படம் அல்லது  - 1நிமிட வீடியோ  உங்கள் முழுப்பெயர்  தொடர்பு எண் email myvelichamchennal @gmail.com  whats App 018-2861950.

www.myelicham.com