வரும் 2023 பள்ளி அமர்வுக்கான நாள்காட்டியில் மாற்றமில்லை

There is no change in the calendar for the upcoming 2023 school session

வரும் 2023 பள்ளி அமர்வுக்கான நாள்காட்டியில் மாற்றமில்லை

 

29August 2022

காஜாங் – 2023-ஆம் ஆண்டிற்கான பள்ளி நாள்காட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மூத்த கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் கூறினார்.

அவற்றில், டிசம்பரில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, மலேசிய கல்வி சான்றிதழ் (SPM) தேர்வை எதிர்க்கொள்ளும் மாணவர்களுக்குக் குறிப்பாகக் கிழக்கு கடற்கரை மாநிலங்களில் வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து தேர்வுகளுக்குத் தயாராவதைக் கடினமாக்கும் என்று அஞ்சப்படுகிறது.

“மலேசிய தேர்வு வாரியம் (LPM) எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலானது வெள்ளத்தின்போது SPM மாணவர்களை நிர்வகிப்பது என்பது கோவிட்-19 காலத்தை விட மிகவும் கடினமானது என்பதை நாம் காண்கிறோம்.

கூடுதலாக, மலேசிய கல்வி அமைச்சு (KPM) SPM மாணவர்கள் பொது அல்லது தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பைத் தொடர பொருத்தமான கால அவகாசம் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறது.

“மாணவர்கள் SPM முடிக்கும் காலம் அவர்கள் படிப்பைத் தொடரும் காலகட்டத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை என்பதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம். அதனால், படிப்பதற்கான விவேகம் இன்னும் இருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

2022/2023 பள்ளி அமர்வுக்கான கல்வி நாட்காட்டி 21 மார்ச் 2022 முதல் 11 மற்றும் 12 மார்ச் 2023 வரை தொடங்கும் என்று கல்வி அமைச்சு முன்பு அறிவித்தது.