கஜானா ரொம்பியதும் மருதநாயகத்துக்கு கமல் போடும் ஸ்கெட்ச்.. கொண்டு வரும் டெக்னாலஜி

Cinema Vettai My Velicham.com Generation Young News Portal

கஜானா ரொம்பியதும் மருதநாயகத்துக்கு கமல் போடும் ஸ்கெட்ச்.. கொண்டு வரும் டெக்னாலஜி

01 Sept 2022

கமல் விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சினிமாவில் முழு வீச்சாக செயல்பட்ட வருகிறார். விக்ரம் படத்தை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரித்து நல்ல லாபம் பார்த்த கமல் தொடர்ந்து இளம் நடிகர்களின் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

சிவகார்த்திகேயன், உதயநிதி போன்ற நடிகர்களின் படங்களை கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். மேலும் நடிப்பதை காட்டிலும் தயாரிப்பில் தான் கமலின் முழு கவனமும் உள்ளது. இந்நிலையில் இந்நிறுவனத்தை தற்போது கமல் புதுப்பித்த வருகிறாராம்.

இதற்காக ஆழ்வார்பேட்டையில் செம டெக்னாலஜியுடன் ஒரு ஹைடெக் ஆபிஸ் ரெடி ஆகிவிட்டது. இதனால் அடுத்தடுத்து கமல் தயாரிக்கும் படங்களின் அறிவிப்பு வெளியாக உள்ளது. கமல் இயக்கி, நடித்து, தயாரிக்க திட்டமிட்டிருந்த மருதநாயகம் படம் தொடங்கப்படாமல் கைவிடப்பட்டது.

இது கமலஹாசனின் கனவு படம் என்பதால் எப்படியும் இப்படத்தை மீண்டும் கையில் எடுப்பாரா என்பது அனைவரது கேள்வியாக உள்ளது. இப்போது கமலுக்கு வயதாகி விட்டதால் இவரால் மருதநாயகம் படத்தில் நடிக்க முடியாது என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

ஆனால் தமிழ் சினிமாவில் பல புதிய டெக்னாலஜியை கொண்டு வந்தவர் கமல் தான். அவருடைய படங்களின் மூலம் தமிழ் சினிமா பல விஷயங்களை கற்றுக்கொண்டு பின்பற்றி வருகிறது. இதனால் கண்டிப்பாக மருதநாயகம் படத்தில் கமல் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் “motion capture deaging” என்ற முறையில் கமலே மருதநாயகமாக நடிப்பதாக ஒரு செய்தி உலாவிக் கொண்டிருக்கிறது. கமல் அறிவித்தால் மட்டுமே இதன் உண்மைத்தன்மை வெளியாகும். ஆனால் அவரது ரசிகர்கள் இப்படத்திற்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர்.