இணையச் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படும் 580 நபர்கள் கைது

580 persons suspected of indulging in cyber gambling activities arrested

இணையச் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படும் 580 நபர்கள் கைது

08 05 2023 - இணையச் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படும் 580 நபர்கள் கைது.

ஜொகூர் பாரு, மே 8: ஜனவரி 1 முதல் நேற்று வரை ஜொகூரில் “ ஓபி டாடு ஹாஸ்”554  பிரத்தியோக சோதனைகள் மூலம் இணையச் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் 580 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் 17 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், அதில் 562 வளாகக் காப்பாளர்கள் மற்றும் 18 சூதாட்டக்காரர்கள் உள்ளனர் என்றும் ஜொகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமத் தெரிவித்தார்.

தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) மூலம் 44 வளாகங்களில் மின்சாரம் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே நேரத்தில் எட்டு வளாகங்கள் ஊராட்சி மன்ற  வணிக  உரிமம் ரத்து செய்ய அனுமதி பெற்றுள்ளன.

பல்வேறு பிராண்டுகளின் 606 யூனிட் கைப்பேசிகள், ஏழு யூனிட் டெப்லட், ஆறு யூனிட் மடிக்கணினிகள் மற்றும் ரொக்கமாக RM190,890 ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளோம்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

திறந்த சூதாட்ட இல்லச் சட்டம் 1953 இன் பிரிவு 4 (1) (c) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் RM50,000 க்கு குறையாத அபராதம் மற்றும் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

கடந்த ஆண்டு 17 முதல் 60 வயதுக்குட்பட்ட 1,012 வளாகக் காப்பாளர்கள் மற்றும் 68 இணையச் சூதாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக கமருல் ஜமான் கூறினார்.

“இணையச் சூதாட்ட நடவடிக்கைகள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால், பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது ஜொகூர் காவல்துறை நடவடிக்கை அறைக்கு 07-221 2999 அல்லது 07-225 4677 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்” என்று அவர் கூறினார்.

– நன்றி  பெர்னாமா