ரிம133,120 வெள்ளி மித்ரா நிதி முறைகேடு ஷேக் விஷால் - குசேகரன் மீது குற்றச்சாட்டு

03 August 2022

மித்ரா எனப்படும் மலேசியா இந்திய உருமாற்ற பிரிவிக்கான நிதியில் ரிம  133,120 வெளியை முறைகேடு செய்ததாக தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை தேசிய ஒருங்கிணைப்புக் கழகத்தின் தலைவரும் அதன் செயலாளருமான நேற்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரினர் .

 செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஸுரா அல்லி முன்னனியில் ஷேக் விஷால் ஷேக் அமாட் (40) ,குணசேகரன் (57)  ஆகியோர் மீது குற்றம் வாசிக்கப்பட்டது. இதில்  ஷேக் விஷால் மீது 16 குற்றச்சாட்டுக்களை மறுத்து  அவர் விசாரணை கோரினர்.மொத்தம் ரிம 25,000.00 வெள்ளி ஜாமினில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.விசாரனைவரை அவர் தமது அனைத்துல பயண கடைப்பிதழை  நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் ஆணையிடப்பட்டது.  

வீ. குணசேகரன் மீது 16 குற்றச்சாட்டுக்கள் கொண்டு வரப்பட்டன. அவரும் குற்றத்தை மறுத்து விசாரணைகோரினார். அவருக்கும் ரிம 25,000.00 வெள்ளி ஜாமினில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தர விடபட்டது அனைத்துல பயண கடைப்பிதழை  நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் ஆணையிடப்பட்டது.  

தங்கள்  சார்ந்த  இயக்கத்தின்  வழி மித்ரா பணத்தை இவர்கள் தவறாக கையாண்டதாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையில் வாசிக்கப்பட்டது நேற்று அரசு தரப்பில்  டிபிபி கலைவாணி ஊழல் தடுப்பு  ஆணையத்தின் சார்பில்  ஆஜரானார். வரும் செப்டம்பர் 6ஆம் தேதி  வழக்கு விசாரணை நடைபெறும்.