கோலாலம்பூர்-தோக்கியோ ஹனேடா விமானத்தின் முதல் பயணிகளாக JDT விளையாட்டு வீரர்கள்

கோலாலம்பூர்-தோக்கியோ ஹனேடா விமானத்தின் முதல் பயணிகளாக JDT விளையாட்டு வீரர்கள்

கோலாலம்பூர்-தோக்கியோ ஹனேடா விமானத்தின் முதல் பயணிகளாக JDT விளையாட்டு வீரர்கள்

செப்பாங்: கோலாலம்பூர் (KUL) மற்றும் தோக்கியோ ஹனேடா (HND) இடையேயான MH36 (JL7096) விமானத்தின் முதல் நேரடி விமானத்தை இன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) மலேசியன் ஏர்லைன்ஸ் கொண்டாடியது.

உள்ளூர் நேரப்படி மதியம் 2.45 மணிக்கு விமானம் புறப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்தவர்களான ஜோகூர் டாருல் தக்சிம் (JDT) கால்பந்து கிளப்பின் வீரர்கள் ஜப்பானில் நடைபெறுகின்ற ஆசிய சாம்பியன்ஸ் லீக்கின் (AC) கடைசி 16-க்கு மலேசியாவிலிருந்து தகுதி பெற்ற முதல் அணியாக வரலாறு படைத்துள்ளனர்.27 வர்த்தக வகுப்பு இருக்கைகள், கூடுதல் வசதி கொண்ட16 எக்கோனோமி இருக்கைகள் மற்றும் 247 எக்கோனோமி வகுப்பு இருக்கைகள் உட்பட 290 இருக்கைகள் கொண்ட A330-300 விமானம் மூலம் வாரத்திற்கு இருமுறை சேவை வழங்கப்படும் என்று மலேசியன் ஏர்லைன்ஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இந்தப் புதிய சேவையானது மலேசியா ஏர்லைன்ஸின் தற்போதைய கோலாலம்பூர்-தோக்கியோ நரித்தா செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கும், ஜப்பானில் உள்ள அனைத்துலக மையங்களைப் பயன்படுத்தி கோலாலம்பூர்-தோக்கியோ இடங்களுக்கான இணைப்புகள் மற்றும் பயணத்திட்டங்களை மிகவும் வசதியாக மாற்றி அமைக்கும்,” என்று தேசிய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.